ஈரான்: ஐஎஸ் தலைவன் மரணம்

ஈரான்: ஐஎஸ் தலைவன் மரணம்

1 mins read
8c0bb003-4f20-477e-8bc4-8da34953617e
-

ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தின் தலைவனான அபுபக்கர் அல் பாக்தாதி (படம்) கொல்லப்பட்டு விட்டதாக ஈரான் மூத்த தலைவர் அயத்துல்லா கமேனியின் பிரதிநிதி உறுதியாகத் தெரிவித்துள்ளார். "பயங்கரவாதி பாக்தாதி நிச்சயமாக மாண்டுவிட்டான்," என்று குத்ஸ் படையின் பிரதிநிதியான சமய போதகர் அலி ‌ஷிராஸி தெரிவித்தார் என்று ஈரான் அர சாங்க ஊடகமான 'ஐஆர்என்ஏ' கூறியுள்ளது. ஆனால், அவன் எப்படிக் கொல்லப்பட்டான் என்ற விவரம் தெரிவிக்கப்படவில்லை.

2014ஆம் ஆண்டு ஈராக்கின் மோசுல் நகரில் ஒரு பள்ளிவாசலில் இருந்து இஸ்லாமிய தேசத்தை உருவாக்கிவிட்டதாக பாக்தாதி அறிவித்தது முதலே அவன் கொல்லப்பட்டதாக அல்லது காயம் அடைந்துள்ளதாக அவ்வப்போது செய்திகள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன.

சிரியாவில் தான் நடத்திய வான்வழித் தாக்குதலில் பாக்தாதி கொல்லப்பட்டிருக்கலாம் என்று சென்ற மாதம் 17ஆம் தேதி ரஷ்யா கூறி இருந்தது. அதே நேரத்தில், பாக்தாதியின் மரணத்தை உறுதிப் படுத்தும் விதமாக தனக்கெதுவும் தகவல் கிடைக்கவில்லை என்று அமெரிக்கா கூறியுள்ளது.