ஜகார்த்தா: போராளி என்று சந்தேகிக்கப்பட்ட ஒருவரின் வீட்டில் இந்தோனீசியப் போலிசார் கடந்த ஜூன் 25ஆம் தேதி சோதனை செய்ததில் ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தின் பிரசாரங்கள் அடங்கிய நோட்டுப் புத்தகங்கள் கைப்பற்றப்பட்டன. அந்த நோட்டுப் புத்தகங்களில் சிலவற்றை சிறுவர்கள் பயன் படுத்தியது போலத் தெரிகிறது என்று போலிசார் கூறினர். மேடானில் போலிஸ் அதிகாரி ஒருவர் தாக்கப்பட்டு மரணம் அடைந்தது தொடர்பில் போலிசார் சென்ற மாதம் ஒரு சந்தேக நபரின் வீட்டில் சோதனை மேற்கொண் டனர்.
ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள ஐஎஸ் இயக்கத்தினருக்கு இந்தோனீசியாவில் ஆயிரக் கணக்கான ஆதரவாளர்கள் இருப்பதாக அதிகாரிகள் நம்பு கின்றனர்.

