ஈக்வடோர் கடலோரப் பகுதிகளை உலுக்கிய 6 ரிக்டர் நிலநடுக்கம்

ஈக்வடோர் கடலோரப் பகுதிகளை உலுக்கிய 6 ரிக்டர் நிலநடுக்கம்

1 mins read

கியூட்டோ: தென் அமெரிக்க நாடான ஈக்வடோரின் கடலோரப் பகுதிகளை நேற்று நிலநடுக்கம் உலுக்கியதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 6.0 ஆக பதிவாகியுள்ளது. மிதமான அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் சேதங்கள் அதிகம் இல்லை என்றும் சுனாமி எச்சரிக்கை எதும் விடுக்கப்படவில்லை எனவும் அங்குள்ள ஊடகங்கள் தெரிவித்துள்ளன. நிலநடுக்கத்தின்போது காயமடைந்த 5 பேர் மட்டும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். கடந்தாண்டு ஈக்வடோரில் ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் நாட்டையே புரட்டிப்போட்டு விட்டது. சுமார் 650 பேர் இந்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தனர்.