மோசுல்: ஈராக்கின் மோசுல் நகரை போராளிகளிடமிருந்து ராணுவத்தினர் கைப்பற்றியுள்ள போதிலும் ஐஸ் பயங்கரவாத அமைப்புக்கு எதிரான போராட்டம் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்று ஈராக்கில் உள்ள அமெரிக்க மூத்த தளபதி ஒருவர் தெரிவித்துள்ளார். ஈராக்கில் ஐஎஸ் போராளிகள் இன்னும் இருப்பதாக ஜெனரல் ஸ்டீபன் டவுன்சென்ட் கூறினார்.
ஐஎஸ் போராளிகள் மீண்டும் வலுப்பெறுவதை ஈராக்கிய அரசாங்கம் தடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். பல மாதங்களாக நீடித்த கடும் சண்டைக்குப் பிறகு மோசுல் நகரை ஈராக்கியப் படையினர் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.
இதனைத்தொடர்ந்து ஈராக்கிய தலைவர்கள், மக்கள் மற்றும் ராணுவத்தினர் வெற்றிக்களிப்பில் திளைத்திருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.

