நஜிப்: 1எம்டிபி நிதி பல வழிகளில் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது

நஜிப்: 1எம்டிபி நிதி பல வழிகளில் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது

1 mins read

புத்ராஜெயா: மலேசிய அரசாங் கத்திற்குச் சொந்தமான 1எம்டிபி நிறுவனத்தின் நிதி பல வழிகளில் மக்களுக்கு பகிர்ந்து கொடுக் கப்பட்டுள்ளது என்று மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக் தெரிவித் துள்ளார். இதுபற்றி மக்களுக்கு தெரிந் திருக்காது என்றும் அவர் சொன் னார். 1எம்டிபி நிறுவனம் பல்வேறு குறைகூறல்களுக்கு இடையில் மக்களுக்கு பல வழிகளில் உதவி வருவதாக திரு நஜிப் தெரிவித்தார். ஹஜ் பயணம் மேற்கொள்வோருக்கு நிதி உதவி. வீடுகள் கட்டிக்கொடுப்பது, மாணவர்களின் கல்விக்கு நிதி உதவி வழங்குவது போன்ற வற்றுக்கு 1எம்டிபி நிறுவனத்தின் நிதி பயன்பட்டு வருவதாக பிரதமர் குறிப்பிட்டார். மலேசியாவில் வெள்ளப்பெருக்கு போன்ற இயற்கை பேரிடர் சமயத்தில் மீட்புப் பணிகளுக்கு உதவ அந்நிறுவனம் முன்வருவ தாகவும் அவர் சொன்னார்.

"உண்மையில் 1எம்டிபி நிறுவனம் அதன் நிதியை மக்களுக்கு சரி சமமாக பகிர்ந்து கொடுத்துள்ளது," என்று திரு நஜிப் கூறினார். ஹஜ் பயணம் மேற்கொள் வோருக்கு அந்நிறுவனம் கடந்த 6 ஆண்டுகளில் 57 மில்லியன் ரிங்கிட் செலவு செய்துள்ளது. 1எம்டிபி நிறுவனத்தின் பல மில்லியன் டாலர் நிதி காணாமல் போனதைத் தொடர்ந்து 2015ஆம் ஆண்டிலிருந்து அந்த விவகாரம் பற்றிய செய்தி தலைப்புச் செய்தி களாக வெளிவந்தது. அந்த விவகாரம் தொடர்பில் அமெரிக்காவும் விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் அந் நிறுவனத்தின் உதவிகளை திரு நஜிப் பட்டியலிட்டுள்ளார்.