15 ஆண்டுகளாக பூட்டிய அறைக்குள் அடைபட்டுக் கிடந்த பெண் மீட்பு

15 ஆண்டுகளாக பூட்டிய அறைக்குள் அடைபட்டுக் கிடந்த பெண் மீட்பு

1 mins read

கோவா: கோவாவில் கடந்த 15 ஆண்டுகளாக வீட்டில் உள்ள அறையில் அடைத்து வைக்கப் பட்டிருந்த பெண், உள்ளூர் மக்களின் தலையீட்டுக்குப் பிறகு போலிசாரால் மீட்கப்பட்டார். இதுகுறித்து பேசிய குற்றப் பிரிவு காவல்துறை கண்காணிப் பாளர் கார்த்திக் காஷ்யப், "கோவாவின் வடக்கு கடற்கரைப் பகுதியில் உள்ள கண்டோலிம் கிராமத்தில் உள்ள வீட்டில் இருந்து சுனிதா வெர்லேக்கர் என்னும் பெண் மீட்கப்பட்டார். அவர் வீட்டில் பூட்டப்பட்ட அறைக் குள் சுமார் 15 ஆண்டுகளாக அடைக்கப்பட்டிருந்தார். அவருக்கு தற்போது 45 வயதாகிறது. "அதே வீட்டில் இருந்த சுனிதாவின் சகோதரர் அவருக்கு உணவளித்து வந்துள்ளார். அதே நேரத்தில் அவரை நாங்கள் மீட்கும்போது உடை இல்லாமல் இருந்தார்.

அங்கு மின்சாரமும் இல்லை. அறை முழுவதும் சிறு நீரின் துர்நாற்றம் உறைந்திருந் தது. கதவில் உள்ள ஓட்டை வழி யாக அவருக்கு உணவளிக்கப் பட்டுள்ளது. "சுனிதாவின் நிலை குறித்து எங்களுக்கு தொண்டு நிறுவனம் ஒன்று தகவல் அளித்ததைத் தொடர்ந்து மகளிர் காவல் நிலை யத்தினர் சுனிதாவை மீட்டனர். "தொடர்ந்து அவர் கோவா மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டார். அதற்குப் பின் னர் மாநில அரசுக்குச் சொந்த மான மனநல, மனித நடத்தை மையத்துக்கும் அவரை அனுப்பி யுள்ளோம். சுனிதாவின் சகோதரர் மோகன்தாஸ் வெர்லேக்கர் மீது வழக்கு பதிவு செய்யப்பட் டுள்ளது," என்றார்.