நியூயார்க்: அதிபர் டோனல்ட் டிரம்ப்பால் பதவியிலிருந்து நீக்கப் பட்ட முன்னாள் மத்திய புலனாய் வுத்துறை இயக்குநர் ஜேம்ஸ் பி. கோமே (படம்) தனது பொதுச் சேவைஅனுபவங்களை புத்தகமாக எழுதி வருகிறார். டிரம்ப் நிர்வாகத் தின் கீழ் கொந்தளிப்பான சூழ் நிலையில் பணியாற்றிய அனுபவங் களையும் அவர் நூலில் உள்ள டக்குவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையொட்டி கடந்த சில நாட்களாக திரு கோமே பல வெளியிட்டாளர் களையும் எழுத்தாளர்களையும் சந்தித்து வருகிறார்.
இந்த நிலையில் முக்கிய வெளீயீட்டு நிறுவனங்கள் பல ஆர்வம் தெரிவித்துள்ளதால் திரு கோமேயின் நூல் ஏலத்தில் விடப் படும் என்று அவரை பிரதிநிதிக்கும் லாடிமெர் தெரிவித்தார். இந்தப் புத்தகம் வழக்கமான சுயசரிதையைப் போல் இராது. ஆனால் அதே சமயத்தில் தனது வாழ்நாளில் சந்தித்த சவால்மிக்க காலகட்டத்தில் நடைபெற்ற முக் கிய நிகழ்வுகளை தமது நூலில் அவர் விவரிப்பார். அதிபர் தேர்தல் சமயத்தில் ஹில்லரி கிளிண்டனின் தனிப் பட்ட மின் அஞ்சல் தொடர்பான விசாரணைகள், 2016ஆம் ஆண் டின் தேர்தலில் ரஷ்ய தலையீடு குறித்த விசாரணைகள் போன்ற வற்றில் திரு கோமேவுக்கு ஏற்பட்ட அனுபவங்களும் நூலில் இடம்பெறும்.

