ஜோகூர் சுல்தானின் ஒரே மகளுக்குத் திருமணம்; டச்சுக்காரரை மணக்கிறார்

ஜோகூர் சுல்தானின் ஒரே மகளுக்குத் திருமணம்; டச்சுக்காரரை மணக்கிறார்

1 mins read
0d649bb4-2282-450f-b043-a84634baab1e
-

ஜோகூர்: ஜோகூர் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கந்தரின் ஒரே மகளான அமினா மைமுனா இஸ்கந்தாரியா சுல்தான் இப் ராஹிம் அடுத்த மாதம் 14ஆம் தேதி டச்சுக்காரரான டென்னிஸ் முஹமட் அப்துல்லாவை மணக் கிறார். ஜோகூர் சுல்தானின் அரண் மனையில் அவர்களுடைய திரு மணம் தனிப்பட்ட முறையில் நடை பெறும். செய்தியாளர்களிடம் பேசிய அரச மன்றத்தின் தலைவர் அப் துல் ரஹிம் ரம்லி, "ஜோகூர் அரண்மனை கலாசாரப்படி பாரம் பரிய மலாய் முறையில் அமினாவுக் கும், வயது 31, டென்னிசுக்கும், 28, திருமணம் நடைபெறும்," என்றார். நெதர்லாந்தில் லிசேயில் பிறந்த டென்னிஸ் 2015ஆம் ஆண்டு மே 31ஆம் தேதி இஸ்லாமிய மதத் துக்கு மாறினார். அரச குடும்ப திருமணத்தை யொட்டி ஆகஸ்ட் 8ஆம் தேதி திருமணக் கொண்டாட்டத்தின் தொடக்கத்தை குறிக்கும் வகை யில் விழாக்கால கொடி பறக்க விடப்படும்.

ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை 10.00 மணிக்கு நிச்சயதார்த்தம் நடைபெறும். இதையடுத்து திரு மண நிகழ்ச்சி நடைபெறும். ஜோகூர் முஃப்தி முஹமட் டஹ்ரில் ஷம்சுதின் திருமணத்தை நடத்தி வைக்கிறார் என்று திரு ரஹிம் சொன்னார்.

ஜோகூர் இளவரசி அமினா. படம்: மலேசிய ஊடகம்