பிரிட்டிஷ் அரசியாரின் கையைத் தொட்ட கனடா ஆளுநர்

பிரிட்டிஷ் அரசியாரின் கையைத் தொட்ட கனடா ஆளுநர்

2 mins read
6ff6ae95-05f5-4893-82d9-d4ed5e65d8f7
-

லண்டன்: கனடாவின் ஆளுநரான டேவிட் ஜான்ஸ்டன், அரச குடும்ப நடைமுறைகளை மீறி பிரிட்டிஷ் அரசியாரைத்தொட்டுள்ள சம்பவம் பல விமர்சனங்களுக்கு உள்ளாகி யிருக்கிறது. ஆனால் அரசியாரைப் பாது காக்கவே அவரைத் தொட்டதாக ஆளுநர் டேவிட் ஜான்ஸ்டன் விளக்கம் அளித்துள்ளார். லண்டனில் நடைபெற்ற கன டாவின் 150வது பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற பிரிட்டிஷ் அர சியார் படிக்கட்டில் இறங்கியபோது அவரது கையை ஆளுநர் ஜான்ஸ் டன் தாங்கிப் பிடித்தார். "படிக்கட்டில் இறங்கிய அரசி யாரின் பாதுகாப்பு குறித்து கவலை ஏற்பட்டது. அரசியாருக்கு எந்த வித தடுமாற்றமும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதே எனது அக்கறை யாகவும் இருந்தது," என்று பிபிசிக்கு அளித்த பேட்டியில் திரு ஜான்ஸ்டன் கூறினார்.

"கனடா ஹவுசிலிருந்து டிராஃபல்கர் சதுக்கம் வரையிலான இறக்கமான பாதை சீராக இல்லை. அங்கு போடப்பட்டிருந்த தரை விரிப்பும் வழுக்குவதைப் போல இருந்தது. இதனால் அரச குடும் பத்தின் வழக்கத்தை மீறுவதாக இருந்தாலும் அவருக்கு எந்தவித பாதிப்பும் ஏற்பட்டு விடக்கூடாது என்ற உணர்வே இருந்தது," என்றார் ஆளுநர் ஜான்ஸ்டன். புதன்கிழமை மாலை கனடா வின் தூதகரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 91 வயது பிரிட்டிஷ் அரசியார் பங்கேற்றபோது இள வரசர் பிலிப்பும் உடன் இருந்தார். கனடாவில் பிரிட்டிஷ் அரசி யாரின் பிரிதிநிதியாக திரு ஜான் ஸ்டன் உள்ளார். பிரிட்டிஷ் அரச குடும்பத்தின் நடைமுறைகள் மீறப்படுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன் 2009ல் அமெரிக் காவின் முன்னைய தலைமகளான மிஷல் ஒபாமா, அரசியாரை கை களால் அரவணைத்த சம்பவம் தலைப்புச் செய்தியாக பல பத்திரி கைகளில் இடம்பெற்றது.