மணிலா: சர்ச்சைக்குரிய தென் சீனக் கடல் பகுதியில் பிலிப்பீன்சு டன் சேர்ந்து எரிசக்தி திட்டத்தில் ஈடுபடுவதை சீனா ஆதரிப்பதாக சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி கூறியுள்ளார். இரண்டு நாள் பயணமாக பிலிப்பீன்ஸ் சென்றிருந்த திரு வாங், தென்சீனக் கடல் பகுதியில் எந்த ஒரு நாடும் தன்னிச்சையாக எடுக்கும் நடவடிக்கை பிரச் சினையை ஏற்படுத்தக்கூடும் என்றும் இதனால் இரு தரப்பு உறவு பாதிக்கப்படும் என்றும் சொன்னார். அந்தக் கடல் பகுதியில் எண்ணெய்த் திடல்களை மேம் படுத்துதவதற்கு ஒரு பங்காளி கிடைத்துவிட்டதாக பிலிப்பீன்ஸ் அதிபர் டுட்டர்டே கூறிய மறுநாள் சீன அதிபர் அந்த கூட்டுத் திட்டம் பற்றி அறிவித்தார். தென்சீனக் கடல் பகுதியில் உரிமை கொண்டாடும் எந்த ஒரு நாடும் தன்னிச்சையாக ஏதேனும் ஒரு செயல் திட்டத்தில் இறங் கினால் மற்ற நாடும் அத்தகைய செயலில் ஈடுபடக்கூடும் என்றும் இதனால் அப்பகுதியில் பிரச்சினை இன்னும் சிக்கலாகும் என்றும் திரு வாங் மணிலாவில் நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் கூறினார். அந்தக் கடல் பகுதியில் நிலைத்தன்மையைக் கட்டிக் காக்கவே சீனா விரும்புகிறது என்றும் அவர் சொன்னார். தென்சீனக் கடல் பகுதியில் பெரும் பகுதிக்கு உரிமை கொண்டாடி வரும் சீனா அதன் கோரிக்கையை வலுப்படுத்திக் கொள்ளும் வகையில் அப் பகுதியில் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 2017-07-26 08:00:00 +0800
பிலிப்பீன்சுடன் கூட்டாக செயல் திட்டத்தில் ஈடுபட சீனா ஆதரவு
1 mins read

