மலேசியா: சமயப் போதகர் கடத்தலில் ஆட்கடத்தல் கும்பல் ஈடுபட்டிருக்கலாம்

1 mins read

கோலாலம்பூர்: மலேசியாவில் சில மாதங்களுக்கு முன்பு கிறிஸ்துவ சமயப் போதகரான ரேமண்ட் கோ கடத்தப்பட்டதில் தென் தாய்லாந்தைச் சேர்ந்த ஆட்கடத்தல் கும்பல் சம்பந்தப் பட்டிருக்கலாம் என்று போலிசார் சந்தேகிப்பதாக மலேசிய போலிஸ் படைத் தலைவர் காலிட் அபு பக்கர் கூறினார். அண்மையில் மலேசியாவில் கைது செய்யப்பட்ட மூன்று ஆட்கடத்தல் சந்தேகப் பேர்வழிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இத்தகைய கும்பலால் ரேமண்ட் கோ கடத்தப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது என்றார் அவர். அவரை கடத்தல்காரர்கள் பக்கத்து நாட்டுக்கு கொண்டு சென்றிருக்கலாம் என்று கூறப் படுகிறது. இது தொடர்பான விசாரணையில் தாய்லாந்து போலிசாருடன் ஒத்துழைத்து வருவதாகவும் திரு காலிட் கூறினார். கடந்த பிப்ரவரி மாதம் 13ஆம் தேதி பெட்டாலிங் ஜெயாவில் முகமூடி அணிந்த நபர்களால் கடத்தப்பட்ட ரேமண்ட் கோ என்ன ஆனார் என்பது மர்மமாகவே உள்ளது.