வெளிநாட்டுப் பணிப்பெண்கள் இணையம் வழி சுயமாக தீவிரவாதிகளாகும் ஆபத்து

வெளிநாட்டுப் பணிப்பெண்கள் இணையம் வழி சுயமாக தீவிரவாதிகளாகும் ஆபத்து

1 mins read

ஜகார்த்தா: ஜகார்த்தாவில் அதிபர் மாளிகையை தகர்ப் பதற்கான சதித் திட்டத்தை போலிசார் முறியடித்ததை அடுத்து இரு இந்தோனீசியப் பெண்கள் கடந்த டிசம்பர் மாதம் கைது செய்யப்பட்டனர். புத்தாண்டுக்கு முதல் நாள் பாலியில் தற்கொலைத் தாக்குதலில் ஈடுபட முயன்ற தற்காக டியன் யுலியா நோவி, இகா புஸ்பிட்டாசாரி ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். அவ்விருவரும் வெளிநாடு களில் பணிப்பெண்களாக வேலை செய்தவர்கள். டியன் சிங்கப்பூர் மற்றும் தைவானிலும் இகா ஹாங்காங்கிலும் பணிப் பெண்களாக வேலை செய்தவர் கள். இத்தகைய பெண்கள் இணையம் வழி தீவிரவாதத்தில் சேரும் ஆபத்து உள்ளது என்பதை இது உணர்த்துவதாக சண்டை, சச்சரவு ஆய்வு பற்றிய கொள்கை ஆய்வுக் கழகம் கூறியது. கிழக்கு ஆசியாவில் பணிப்பெண்களாக வேலை செய்யும் பல இந்தோனீசியப் பெண்கள் ஐஎஸ் ஆதரவு பெற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததாக ஐகார்த்தா ஆய்வாளர் கள் கூறியுள்ளனர்.