தென்சீனக் கடல் பகுதிக்கு போர்க்கப்பல்களை அனுப்ப விரும்புகிறது பிரிட்டன்

தென்சீனக் கடல் பகுதிக்கு போர்க்கப்பல்களை அனுப்ப விரும்புகிறது பிரிட்டன்

1 mins read

ஹாங்காங்: சர்ச்சைக்குரிய தென்சீனக் கடல் பகுதியில் பெரும் பகுதிக்கு சீனா உரிமை கொண்டாடி வரும் வேளையில் அப்பகுதிக்கு இரு போர்க்கப்பல்களை அனுப்ப பிரிட்டன் விரும்புகிறது என்று பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார். ஆஸ்திரேலியப் பயணத்தின்போது அவர் இவ்வாறு கூறினார். புதிய விமானந்தாங்கி கப்பல்கள் இரண்டினை அப்பகுதிக்கு அனுப்பவிருப்பதாகவும் சரியாக எந்தப் பகுதி என்பது இன்னும் தீர்மானிக்கவில்லை என்றும் திரு போரிஸ் ஜான்சன் கூறினார். தென்சீனக் கடல் பகுதியில் சுதந்திரமான கடல் பயணத்தை உறுதிப் படுத்திக்கொள்வது தங்கள் நடவடிக்கையின் நோக்கம் என்று அவர் சொன்னார்.