வாஷிங்டன்: ரஷ்யா, ஈரான், வடகொரியா ஆகிய நாடுகளுக்கு எதிராக கூடுதல் தடைகள் விதிக்க வகை செய்யும் மசோதா, அமெரிக்க செனட் சபையில் நேற்று நிறைவேற்றப்பட்டது. மசோதாவுக்கு ஆதரவாக 98 பேர் வாக்களித்த நிலையில் இருவர் மட்டுமே எதிராக வாக்களித்தனர். அடுத்து அதிபர் டோனல்ட் டிரம்ப் அதில் கையெழுத் திட வேண்டும். ஆனால் அதை அதிபர் ஏற்றுக் கொள்வாரா? இல்லையா என்பது தெரியவில்லை. அவர் தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன் படுத்தி ரத்து செய்யவும் வாய்ப்பு இருக்கிறது. ரஷ்யாவுக்கு எதிராக தடைகள் விதிக்க அமெரிக்க பிரதிநிதிகள் சபை ஒப்புதல் அளித்தபோதே திரு டிரம்ப்பின் தரப்பில் இருந்து எதிர்ப்பு தெரி விக்கப்பட்டது. இந்நிலையில் ரஷ்யா, உள்ளிட்ட மூன்று நாடுகள் மீது புதிய தடைகள் விதிப்பதற்கு செனட் சபை ஒப்புதல் அளித் துள்ளது. இந்த வாரத் தொடக் கத்தில் அமெரிக்க பிரதிநிதிகள் சபை இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தது. அந்த மூன்று நாடுகளுக்கு எதிராக தடைகள் விதிப்பதை அதிபரும் அவரது நிர்வாகத்தினரும் ஆதரிப்பர் என்று வெள்ளை மாளிகை பத்திரிகை செயலாளர் சாரா சாண்டர்ஸ் கூறினார். அந்த மசோதாவில் அதிபர் விரைவில் கையெழுத்திட வேண்டும் என்று குடியரசுக் கட்சி மூத்த செனட்டர் ஜான் மெக்கெய்ன் கூறினார்.
ரஷ்யா, ஈரான், வடகொரியாவுக்கு எதிராக தடைகள் விதிக்க செனட் சபை ஒப்புதல்
1 mins read

