குடியரசுக் கட்சி செனட்டர்களை முட்டாள்கள் என்று சாடுகிறார் அதிபர் டோனல்ட் டிரம்ப்

குடியரசுக் கட்சி செனட்டர்களை முட்டாள்கள் என்று சாடுகிறார் அதிபர் டோனல்ட் டிரம்ப்

1 mins read
66b62aff-483f-46f4-aad9-71e092da04d8
-

வா‌ஷிங்டன்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், சுகாதார மசோதா தோல்வியடைந்த ஆத் திரத்தில் குடியரசுக் கட்சி உறுப் பினர்களை முட்டாள்கள் என்று சாடியுள்ளார். "அவர்கள் முட்டாள்கள் போலுள்ளனர்," என்று டுவிட்டர் பதிவில் திரு டிரம்ப் குறிப்பிட்டார். 'ஒபாமாகேர்' சுகாதாரப் பரா மரிப்பு சேவையை மாற்றும் டிரம்ப் பின் முயற்சி கடந்த வெள்ளிக் கிழமை தொடங்கியது.

ஆனால் ஜனநாயகக் கட்சி உறுப்பினர்களுடன் சேர்ந்து குடி யரசுக் கட்சி செனட்டர்களும் அம் முயற்சியை முறியடித்து விட் டனர். இதனால் ஒபாமாகேர் திட் டத்தை மாற்றும் டிரம்ப்பின் முயற்சி 51-49 என்ற வாக்கு எண்ணிக் கையில் தோல்வியைத் தழுவியது. இந்நிலையில் குடியரசுக் கட்சி செனட்டர்களை சாடியுள்ள அதிபர் டிரம்ப், அவர்களுடைய சொந்த சுகாதாரப் பராமரிப்பு திட்டங்களை நிறுத்தப் போவதாகவும் மிரட்டியுள்ளார்.

"பழைய சுகாதாரப் பராமரிப்பை மாற்றும் திட்டம் இறந்துவிட வில்லை," என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார். செனட் வாக்களிப்பில் சுகாதார மசோதா தோற்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அதிபர் டிரம்ப் தொடர்ச் சியாக டுவிட்டர்களில் தமது கருத்துகளை வெளியிட்டு வரு கிறார். அதிபரின் முயற்சியை புறக் கணிப்பதற்காகவே புற்றுநோய் சிகிச்சை பெற்றுவந்த செனட்டர் ஜான் மெக்கெய்ன் வா‌ஷிங்டனுக்கு திரும்பியதும் திரு டிரம்ப்புக்கு எதிராக அமைந்தது. ஆனால் செப்டம்பரில் சுகாதார பராமரிப்பு மசோதாவுக்கு மீண்டும் உயிரூட்ட முடியும் என்று அதிபர் டிரம்ப் நம்புகிறார்.

இம்மாதம் 24ஆம் தேதி செய்தியாளர்கள் கூட்டத்தில் சுகாதார பராமரிப்பு பற்றி பேசிய அதிபர் டிரம்ப். கோப்புப் படம்: புளும்பர்க்