ஜகார்த்தாவிலிருந்து சிட்னி வரும் விமானத்தைத் தகர்க்க சதி

ஜகார்த்தாவிலிருந்து சிட்னி வரும் விமானத்தைத் தகர்க்க சதி

1 mins read
bfe9ee19-3d01-418a-b537-63a0e5ad6b87
-

சிட்னி: விமானத்தைத் தகர்க்கும் பயங்கரவாதிகளின் சதித் திட் டத்தை ஆஸ்திரேலியப் போலிசார் முறியடித்துள்ள வேளையில் ஜகார்த்தாவிலிருந்து சிட்னி வரும் விமானத்தைத் தகர்க்க பயங்கரவாதிகள் திட்டமிட்டிருந் திருக்கலாம் என்று தாங்கள் நம்புவதாக ஆஸ்திரேலியப் போலி சார் தெரிவித்துள்ளனர். அத்தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள நால்வர் நச்சுவாயு அல்லது நாட்டு வெடிகுண்டைப் பயன்படுத்தி விமானத்தைத் தகர்க்க சதித் திட்டம் தீட்டியிருந்ததாக போலி சார் கூறியுள்ளனர். போலிசார் சனிக்கிழமை சிட்னியில் மேற் கொண்ட அதிரடிச் சோதனை களின்போது 2 தந்தையரும் அவர்களின் இரு மகன்களும் கைது செய்யப்பட்டனர். அந்த நால்வர் மீது இன்னும் குற்றம் எதுவும் சாட்டப்படவில்லை. குற்றம் எதுவும் சாட்டப்படாமல் அந்த நால்வரை 7 நாட்கள் வரை தடுப்புக்காவலில் வைத்திருக்க முடியும். இறைச்சி அரைக்கும் இயந் திரத்தினுள் நாட்டு வெடிகுண்டை மறைத்துவைத்து அதை லக்கேஜ் பெட்டிக்குள் வைத்து கொண்டுவர பயங்கரவாதிகள் திட்டமிட்டி ருந்ததாகத் தெரியவந்துள்ளது என்று ஆஸ்திரேலியத் தகவல்கள் கூறுகின்றன.

சிட்னியில் அதிரடிச் சோதனைகளை மேற்கொண்டு வரும் போலிசார், ஓர் அடுக்குமாடி குடியிருப்பு கட்டடத்தில் ஆதாரங்களைத் தேடுகின்றனர். படம்: ஏஎஃப்பி