பேங்காக்: பதவியில் இருந்து நீக்கப்பட்ட தாய்லாந்தின் முன் னாள் பிரதமர் யிங்லக் ஷினாவத்ர, தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்ற வியல் கவனக்குறைவு வழக்கைத் தள்ளுபடி செய்யுமாறு நீதிமன்றத் தில் முறையிட்டுள்ளார். நீதிமன்றத்தில் நேற்று சுமார் ஒரு மணி நேரம் பேசிய அவர், "எனது அரசாங்கத்தின் வேளாண் மானியத் திட்டத்தில் நான் குற்றம் ஏதும் புரியவில்லை. அர சியல் விளையாட்டில் நான் பலி கடாவாக்கப்பட்டுள்ளேன்," என்று கண்ணீர் மல்க தனது வாதத்தை முடித்துக்கொண்டார். இத்திட்டத்தினால் விவசாயி களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்தது என்றும் விவசாயிகளின் பிள் ளைகள் படிப்பை தொடருவதற்கு வழிவகுத்தது என்றும் அவர் கூறினார்.
யிங்லக் அரசாங்கத்தில் வேளாண் மானியத் திட்டத்தின் கீழ் சந்தை விலையைவிட 50 விழுக்காடு கூடுதல் விலையில் அரசாங்கத்திற்கு நெல்லை விற்க விவசாயிகளுக்கு சலுகை வழங் கப்பட்டதால் அரசாங்கத்திற்கு பல பில்லியன் டாலர் இழப்பு ஏற் பட்டது. இதையொட்டி விவசாயிகள் நெல் உற்பத்தியை அதிகரித்ததால் அரசாங்கக் கிடங்குகளில் கிட்டத் தட்ட 18 மில்லியன் டன் அரிசி விற்கப்படாமல் தேங்கிக் கிடந்தது. 2014ஆம் ஆண்டு நடந்த ராணுவப் புரட்சி மூலம் யிங்லக் ஆட்சி கவிழ்ந்தது. விமர்சகர்கள், நிதி பொறுப்பற்ற ஊழல் நிறைந்த அரசாங்கமாக அவர் மீது குற்றம்சாட்டியிருந்தனர்.
இருப்பினும் இந்த வழக்கில் தான் தண்டிக்கப்பட்டால் எதிர் காலத்தில் மற்ற தலைவர்கள் மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்தும் முயற்சிகள் தடை படக் கூடும் என்றும் யிங்லக் வாதாடியுள்ளார். இவ்வழக்கின் தீர்ப்பு ஆகஸ்ட் 25ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் யிங்லக்குக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்கப் படலாம்.
தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் யிங்லக். கோப்புப் படம்