கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர், கடந்த சில ஆண்டுகளாக பிரதமர் நஜிப்பை கடுமையாக விமர்சித்து வந்துள்ளார். இந்த விமர்சனங்களுக்கு பிரதமர் நஜிப் பதிலடி கொடுத்து வரும் வேளை யில் துணைப் பிரதமர் அஹமட் ஸாஹிட் ஹமிடியின் பக்கம் திரு மகாதீரின் பார்வை திரும்பியுள்ளது. இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக திரு மகாதீரின் விமர்சனங்களுக்கு திரு ஸாஹிட்டும் பதில் தாக்குதல் தொடுத்து வருகிறார். மலாய் வாக்காளர்களிடையே 92 வயது அரசியல் வாதியான மகாதீரின் செல்வாக்கை பல வீனப்படுத்தும் முயற்சியாகவும் அரசு இந்த முயற்சியில் இறங்கியுள்ளதாகக் கூறப் படுகிறது. 2003 வரை 22 ஆண்டுகள் பிரதமர் பொறுப்பில் இருந்த மகாதீரை எதிர்க்கும் துணிவு அப்போது யாருக்கும் இல்லை. ஆனால் தற்போது எதிர்க்கட்சி கூட்டணித் தலைவரான டாக்டர் மகாதீருக்கு எதிராக விமர்சனங்கள் வெளிப்படையாக இடம்பெற்று வருகின்றன.
பிரதமர் நஜிப்புக்குப் பிறகு சாஹிட்; மகாதீரின் தொடர் தாக்குதல்
1 mins read
-

