பாகிஸ்தான் இடைக்கால பிரதமராக அபாசி தேர்வு செய்யப்பட்டார்

பாகிஸ்தான் இடைக்கால பிரதமராக அபாசி தேர்வு செய்யப்பட்டார்

1 mins read
d5f02072-ce7d-4607-8854-cd5d096815e7
-

கராச்சி: பாகிஸ்தான் நாடாளுமன்றம் நேற்று மாலை ஷாஹித் காகான் அபாசியை (படம்) இடைக்கால பிரதமராக தேர்வு செய்துள்ளது. ஊழல் வழக்கில் குற்றவாளி எனத் தீர்ப்பு அளிக்கப்பட்டதால் பிரதமர் பொறுப்பிலிருந்து நவாஸ் ஷெரீஃப் பதவி விலகினார். அதையடுத்து ஆளும் நவாஸ் ஷெரீஃப்பின் கட்சியான 'பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ்' இடைக்கால பிரதமராக அபாசியை நியமிக்க முடிவு செய்தது. தற்போதைய பஞ்சாப் மாநில முதல்வரான திரு ஷெரீஃப்பின் சகோதரர் ஷாபாஸ் ஷெரீஃப் பிரதமராக பொறுப்பு ஏற்கும் வரை திரு அபாசி பதவியில் நீடிப்பார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் திரு ஷாபாஸ் ஷெரீஃப் பிரதமராவதற்கு ஏதாவது ஒரு நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றாக வேண்டும்.