பாத்தாம்-பிந்தான் பாலத் திட்டம் தொடங்கப்படும்

பாத்தாம்-பிந்தான் பாலத் திட்டம் தொடங்கப்படும்

1 mins read
Google News Preferred Icon

ஜகார்த்தா: பாத்தாமையும் பிந்தானையும் இணைக்கும் 7 கிலோ மீட்டர் பாலத்தை அமைக் கும் திட்டப்பணியை இந்தோனீ சியா தொடங்கவுள்ளது. இந்த பாலத் திட்டம் மூன்று இணைப்புகளின் கட்டுமானப் பணியை உள்ளடக்கியிருக்கும். அந்தப் பாலத்தை அமைப் பதற்கு சைனை பவர் நிறுவனத்தைச் சேர்ந்த ஒரு முதலீட்டு நிறுவனம் உள்ளிட்ட பல நிறு வனங்கள் அவற்றின் யோசனை கள் அடங்கிய விண்ணப்ப மனுக்களை தாக்கல் செய் துள்ளதாக ஆளுநர் ஒருவர் கூறினார். அந்த யோசனைகளை பரிசீலித்து வருவதாகவும் அவர் கூறினார். பாத்தாம்-பிந்தான் பாலத்தை அமைக்கும் யோசனையை பாத்தாம் தொழிலியல் மேம்பாட்டு ஆணையம் தெரிவித்தது. அந்தப் பாலத்தை அமைக்க எவ்வளவு செலவாகும் என்பது இன்னும் தெளிவாகத் தெரிய வில்லை. ஆனால் 350 மில்லியன் அமெரிக்க டாலர் (S$476 மில்லியன்) செலவாகும் என்று 2009ஆம் ஆண்டு வெளிவந்த ஊடகத் தகவல்கள் கூறின.