நடுவானில் சேதமுற்ற விமானம்; பத்திரமாக தரை இறக்கிய விமானிக்கு புகழ், விருது

நடுவானில் சேதமுற்ற விமானம்; பத்திரமாக தரை இறக்கிய விமானிக்கு புகழ், விருது

1 mins read
e9465f93-67ce-4e1b-a427-7cca63a7d8bf
-

கண்ணெதிரே இருப்பது என்ன வென்று தெரியாத அளவுக்கு விமானத்தின் கண்ணாடிகள் சிதைந்த நிலையில் விமா னத்தைப் பத்திரமாகத் தரை இறக்கிய விமானி பெரிதாகப் புகழப்பட்டு வருகிறார். துருக்கி யில் கடந்த வெள்ளிக்கிழமை கிட்டத்தட்ட பார்வையற்ற நிலை யில் விமானம் பாதுகாப்பான முறையில் தரையிறக்கப்படு வதைக் காட்டும் காணொளி ஃபேஸ்புக்கில் வெளியானதும் ஆறு மில்லியன் பேர் அதனைப் பார்த்தனர்.

இஸ்தான்புல் அத்தாதுர்க் விமான நிலையத்திலிருந்து அட்லஸ்குளோபல் ஏர்பஸ் ஏ320 என்னும் துருக்கிய விமானம் சைப்ரஸ் நோக்கிப் பறந்தது. அப்போது கடுமையான புயற் காற்றுடன் மழை பெய்து கொண்டு இருந்தது. விமானத் தினுள் இருந்த வானிலை எச்சரிக்கைக் கருவி திடீரென வேலை செய்யாததால் விமானி அலெக்ஸாண்டர் அகோபோவ் குழம்பிப் போனார். ஆலங்கட்டி மழை கடுமை யாகப் பெய்ததை அவரால் உணர முடியவில்லை. விமானம் பறக்கத் தொடங்கி சுமார் பத்து நிமிடங்கள் ஆன போது கோல்ஃப் பந்து அள வுள்ள பனிக்கற்கள் விமானத் தின் மீது விழுந்தன. அதனைத் தொடர்ந்து விமானத்தின் மூக்குப் பகுதி கடுமையாகச் சேதமுற்றது. மேலும், விமானத் தின் முன்பக்கக் கண்ணாடிகள் நொறுங்கி அவற்றில் ஏராளமான கீறல்கள் விழுந்து பார்வையை மறைத்தன. அப்போது தரையி லிருந்து சுமார் 1,300 மீட்டர் உயரத்தில் விமானம் பறந்து கொண்டிருந்தது.

பனிக்கற்கள் தாக்கியதில் சேதமுற்ற விமானம்.