ரஷ்யா மீது தடைகள் விதிக்க டிரம்ப் ஒப்புதல்; ரஷ்யப் பிரதமர் கண்டனம்

ரஷ்யா மீது தடைகள் விதிக்க டிரம்ப் ஒப்புதல்; ரஷ்யப் பிரதமர் கண்டனம்

1 mins read

வா‌ஷிங்டன்: அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான உறவில் என்றும் இல்லாத அளவுக்கு விரிசல் ஏற்பட்டுள்ளது. ரஷ்யா மீது புதிய தடைகளை அமெரிக்கா விதிப்பதற்கு வகை செய்யும் மசோதாவில் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கையெழுத்திட்டதைத் தொடர்ந்து இருதரப்பு உறவு பெரிதும் பாதிக் கப்பட்டுள்ளது. ரஷ்யாவுக்கு எதிராக புதிய பொருளியல் தடைகளை விதிக்க வகை செய்யும் சட்ட மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. அதன்படி ரஷ்யாவைச் சேர்ந்த ஆயுத தயாரிப்பு நிறுவனங்கள், மற்றும் உளவுத் துறை அமைப்பு கள் மீது பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளன.

இவை தவிர ரஷ்யாவின் எண்ணெய் நிறுவனங்கள் மேற்கத்திய நாடுகளில் நிதியுதவி பெறுவதற்கும் தடை விதிக்கப்பட உள்ளது. விண்வெளி ஆராய்ச் சியில் அமெரிக்காவுக்கும் ரஷ்யா வுக்கும் இடையே ஒத்துழைப்பு நீடிக்கிறது. இதன் காரணமாக இந்தத் துறையில் மட்டும் ரஷ்யா மீது எவ்வித பொருளியல் தடையும் விதிக்கப்படவில்லை. இந்நிலையில் இந்த மசோதாவுக்கு அதிபர் டிரம்ப் ஒப்புதல் வழங்கியிருப்பதாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த புதிய சட்டத்தின் கீழ், ரஷ்ய எரிசக்தி திட்டங்களில் அமெரிக்கர்கள் முதலீடு செய் வதற்கான தொகையின் அளவு வரையறுக்கப்படுகிறது. அத் துடன் அமெரிக்க நிறுவனங்கள் ரஷ்யாவில் முதலீடு செய்வதும் இனி சிரமமானதாக இருக்கும்.