தோக்கியோ: ஜப்பானின் பிரபல சுகிஜி மீன் மார்க்கெட்டில் நேற்று பெரிய அளவில் தீ மூண்டதாகவும் அதனைத் தொடர்ந்து பாதுகாப்பு கருதி பலர் உடனடியாக அப்பகுதி யிலிருந்து வெளியேற்றப் பட்ட தாகவும் அதிகாரிகள் கூறினர். சந்தைப் பகுதியில் மூண்ட தீ வேகமாகப் பரவத் தொடங் கியதும் அப்பகுதியில் இருந்த சுற்றுலாப் பயணிகளும் மக்களும் மற்றும் கடைக்காரர் களும் அவசரமாக வெளி யேற்றப்பட்டதாக தோக்கியோ தகவல்கள் கூறின. தீயால் அப்பகுதி முழுவதும் புகை மூட்டம் சூழ்ந்திருந்த போதிலும் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை என்று உயர் அதிகாரி ஒருவர் கூறினார். அந்த சந்தைப் பகுதியில் மூன்று மாடிக் கட்டடத்தில் நேற்று பிற்பகல் 3 மணியளவில் தீ மூண்டதாக தீயணைப்பாளர்கள் கூறினர். சுமார் 30 தீயணைப்பு வண்டிகளுடன் தீயணைப்பாளர் கள் அவ்விடத்திற்கு விரைந்து சென்றதாகவும் தீயை அணைக்க அவர்கள் சிரமப்பட்டதாகவும் தீயணைப்புக் குழுவினர் கூறினர்.
சுகிஜி மீன் சந்தையில் மூண்ட தீயை அணைக்க போராடும் தீயணைப்பாளர்கள். படம்: ஏஎஃப்பி

