மேடான் விமான நிலையத்தில் இரு விமானங்கள் மோதல்; யாருக்கும் காயம் ஏற்படவில்லை

மேடான் விமான நிலையத்தில் இரு விமானங்கள் மோதல்; யாருக்கும் காயம் ஏற்படவில்லை

1 mins read

ஜகார்த்தா: இந்தோனீசியாவின் மேடான் நகரில் உள்ள விமான நிலையத்தில் இரு விமானங்கள் மோதிக்கொண்டதாகவும் நல்ல வேளையாக அந்த சம்பவத்தால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் அதிகாரிகள் கூறினர். ஓடுபாதையில் அவ்விரு விமானங்களும் எதிர்பாராத விதமாக மோதியதாகவும் அந்த சம்பவம் குறித்து புலன் விசாரணை நடந்துவருவதாக வும் விமான நிலைய உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

விமான நிலையத்தில் தரை இறங்கிய லயன் ஏர் நிறுவனத்தைச் சேர்ந்த போயிங் விமானம் ஒன்று அச்சே மாநிலத் தில் உள்ள ஒரு நகருக்கு புறப்படவிருந்த விங்ஸ் ஏர் விமானத்துடன் மோதியதாகக் கூறப்பட்டது. அவ்விரு விமானங்களில் இருந்த பயணிகளுக்கு எந்த ஆபத்தும் நேரவில்லை என்று விமான நிறுவனப் பேச்சாளர் ஒருவர் கூறினார். அந்தச் சம்பவத்தால் அவ்விரு விமானங் களுக்கும் சிறிது சேதம் ஏற்பட்ட தாக அப்பேச்சாளர் சொன்னார். இந்தோனீசியாவில் விமானப் பயணத் துறை நல்ல வளர்ச்சி கண்டு வருகிறது.