சான் பிரான்சிஸ்கோ: பனாமா சிட்டியிலிருந்து புறப்பட்ட கோபா ஏர்லைன்ஸ் விமானம் கடந்த செவ்வாய்க்கிழமை சான் பிரான்சிஸ்கோ விமான நிலையத்தில் தரை இறங்கியது. விமானம் தரை இறங்கிய சில நிமிடங்களில் அந்த விமானத்தில் இருந்த 17 வயது இளைஞர் ஒருவர் விமானத்தின் அவசரக் கதவை திறந்துகொண்டு விமான இறக்கை வழியாக சறுக்கி வந்து கீழே குதித்திருக்கிறார். அந்த இளைஞரை அருகில் இருந்த கட்டுமானப் பணியாளர்கள் மடக்கிப் பிடித்ததாகவும் பின்னர் அவரை போலிசாரிடம் ஒப்படைத்ததாகவும் தகவல்கள் கூறின. அமெரிக்கரான அந்த இளைஞர் அந்த 7 மணி நேரப் பயணத்தின்போது மிகவும் பதற்றத்துடன் காணப்பட்டதாக சக பயணிகள் கூறினர்.
விமானத்தின் அவசரக் கதவைத் திறந்து இறக்கை வழியாக குதித்தவர் கைது
1 mins read

