ஜோகூரில் பூட்டிய அறைக்குள் தனித்து விடப்பட்ட மூன்று குழந்தைகள்

ஜோகூரில் பூட்டிய அறைக்குள் தனித்து விடப்பட்ட மூன்று குழந்தைகள்

1 mins read

ஜோகூர்பாரு: ஜோகூர் பாருவில் பூட்டப்பட்டிருந்த ஒரு வாடகை அறைக்குள் உடன்பிறந்த மூன்று குழந்தைகள் காணப்பட்டதைத் தொடர்ந்து அந்தச் சம்பவம் குறித்து போலிசார் விசாரித்து வருகின்றனர். ஒரு வயதிலிருந்து 6 வயது வரையிலான அந்தச் சிறார்கள், லார்கின் பெர்டானா பகுதியில் உள்ள அசுத்தமான, துர்நாற்றம் வீசிய ஓர் அறைக்குள் ஒரு சிறிய படுக்கையில் தூங்குவதைக் காட்டும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவியது. இரண்டு சிறுமிகளும் ஒரு சிறுவனும் சிறிதளவு அரிசி சாதம் மட்டுமே சாப்பிட்டிருக்க வேண்டும் என்றும் அவர்கள் குளித்து பல நாட்கள் ஆகியிருக்கும் என்றும் தெரியவந்துள்ளது. பூட்டிய அந்த அறையிலிருந்து சத்தத்தைக் கேட்ட அக்கம்பக்கத் தார் போலிசாருக்கு தகவல் கொடுத்ததைத் தொடர்ந்து போலிஸ் அதிகாரி களும் சமூக நல அதிகாரிகளும் அவ் விடத்திற்கு விரைந்து சென்று அந்த மூன்று குழந்தைகளையும் காப்பாற்றினர்.

கவனக்குறைவாக அந்த மூன்று குழந்தைகளையும் பூட்டிய அறைக்குள் விட்டுச்சென்றது தொடர்பில் அந்த சிறுவர்களின் பெற்றோரை விசாரிக்க இருப்ப தாக ஜோகூர்பாரு சமூக நல உயர் அதிகாரி ஒருவர் கூறினார். குழந்தை சட்டப் பிரிவின் கீழ் அந்தப் பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த அதிகாரி கூறினார். அந்தக் குழந்தைகளின் தாயார் வேலைக்குச் சென்றுவிட்டதாக வும் அவர்களைக் கவனித்துக் கொள்ளும் பொறுப்பு தந்தையிடம் விடப்பட்டிருந்ததாகவும் ஃபேஸ்புக் தகவல் ஒன்று தெரிவித்தது. இன்னும் அக்குழந்தைகளின் பெற்றோர் விசாரிக்கப்படவில்லை என்று ஜோகூர் போலிஸ் படைத் தலைவர் கூறினார்.