மலின்டோ ஏர் உரிமையாளர் குறித்த கேள்விக்கு வேள்பாரி அதிருப்தி

மலின்டோ ஏர் உரிமையாளர் குறித்த கேள்விக்கு வேள்பாரி அதிருப்தி

1 mins read

மலேசியாவின் மலின்டோ ஏர் விமான சேவை நிறுவன உரிமை, விமானநிலைய வரி பாக்கி விவகாரங்களில் அந்நிறுவனத்தைத் தற்காத்துப் பேசியுள்ளது மஇகா. அந்நிறுவனத்தின் உரிமை குறித்து இனரீதியில் கேள்வி எழுப்பப்படுவது பற்றி அதிருப்தி தெரிவித்துள்ள மஇகாவின் தலைமைப் பொருளாளர் எஸ். வேள்பாரி, மலேசிய இந்தியர், மலின்டோ ஏர் நிறுவனத்தின் 46% பங்கை வைத்திருப்பதில் என்ன தவறு என்று கேட்டுள்ளார். மலின்டோ ஏர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான சந்திரன் ராமமூர்த்தியும் அவரது மனைவியும் நிறுவனத்தில் 46% பங்குகளை வைத்துள்ளனர். அத்துடன் லயன் குழும நிறுவனர் ருஷ்டி கிரானா பங்குகளை வைத்திருப்பது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

தேசிய முன்னணியில் உள்ள தமது ஊழியர்கள், பொதுத்துறை, அரசாங்கம் சாராத அமைப்புகளில் உள்ள ஊழியர்கள் அனைவரையும் இன விவகாரங்களில் கவனம் செலுத்த வேண்டாம் என்று வேள்பாரி கேட்டுக்கொண்டார். வெளிநாடு முதலீடுகளுக்கு ஆதரவாளர் பிரதமர் நஜிப் என்றார் அவர். அனைத்து சமூகங்களையும் ஒன்றிணைப்பதில் பிரதமர் நஜிப் கடுமையாகப் பாடுபடுகிறார். அவரின் முயற்சிகளைக் கீழறுப்பதற்கு பதிலாக அவருக்கு ஆதரவாக இருப்போம் என்றார் வேள்பாரி.