ஸிச்சுவானில் நிலநடுக்கம், நிலச்சரிவு: உயிர்ச்சேதம் அதிகரிப்பு, 175 பேர் காயம்

ஸிச்சுவானில் நிலநடுக்கம், நிலச்சரிவு: உயிர்ச்சேதம் அதிகரிப்பு, 175 பேர் காயம்

1 mins read
c7724d8f-00f3-48e9-9c8c-2227f9971cc2
-

பெய்ஜிங்: சீனாவின் ஸிச்சுவான் மாநிலத்தில் நேற்று முன்தினம் நிகழ்ந்த சக்திவாய்ந்த நில நடுக்கத்துக்கும் அதையடுத்து ஏற்பட்ட நிலச்சரிவுக்கும் குறைந் தது 36 பேர் இறந்தனர். சுற்று லாப் பயணிகள் உட்பட 175க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர் என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். செவ்வாய்க்கிழமை இரவு 9.20 மணியளவில் ஏழு ரிக்டர் அளவுள்ள நிலநடுக்கம் ஜியூ ஷெய்கோ வட்டாரத்தைத் தாக்கியது. இதனால் அருகில் ஜியூ ஷெய்கோ இயற்கை பூங் காவில் இருந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகளும் காயம் அடைந்தனர்.

இருபது கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது என்று அமெ ரிக்க வானிலை ஆய்வு நிலை யம் முன்னதாக எச்சரித்திருந் தது. நேற்றுக் காலை 6.6 ரிக்டர் அளவுள்ள மற்றொரு நில நடுக்கம் சீனாவின் தென்மேற்கு வட்டாரமான ஸின்ஜியாங் பகுதி களை உலுக்கியது. உயிர்ச்சேதம் ஏற்பட்டதா என்பது குறித்து உடனடியாகத் தகவல் இல்லை. ஆனால் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தையடுத்து நிலச்சரிவுகளும் ஏற்பட்டன. இதில் 100க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் சிக்கிக் கொண்டனர் என்று உள்ளூர் அதிகாரிகள் கூறினர்.

நிலச்சரிவில் காயம் அடைந்த ஒருவரை மீட்புப் படையினர் தூக்கிச் செல்கின்றனர். படம்: ஏஎஃப்பி