கோலாலம்பூர்: மலேசியாவில் பினாங்கு மாநிலத்தின் ஆட்சிக்குழு உறுப்பினர் பீ பூன் போவும் மேலும் இருவரும் ஐந்து நாட்களுக்கு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். புக்கிட் மெர்டாஜாமில் சட்ட விரோதமாக ஒரு தொழிற் சாலையை நடத்தியது தொடர் பாக திரு பீ பூன் போ வெள்ளிக் கிழமை கைது செய்யப்பட்டார். கிராம மக்கள் கொடுத்த புகார்களைத் தொடர்ந்து அந்த தொழிற்சாலையை மலேசிய ஊழல் ஒழிப்பு அதிகாரிகள் வியாழக்கிழமை சோதனை செய்தனர்.
திரு பீ பூனுடன் சேர்த்து அந்தக் கார்பன் தொழிற்சாலை யின் நிர்வாகியான 70 வயது முதியவரும் தொழிற்சாலை இயக்குநரும் ஆட்சிக் குழு உறுப்பினர் பீ பூன் போவின் 37 வயது மகனும் நேற்று நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர். இவர்களை ஐந்து நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து ஊழல் தடுப்பு அதிகாரிகள் விசாரிக்க மாவட்ட நீதிமன்றம் அனுமதி வழங்கியது. பீ பூன் தரப்பில் வழக்கறிஞர் ராம் கர்ப்பால் சிங்கும் ஆர்.எஸ்.என் ராயரும் முன்னி லையாகினர்.

