பிலிப்பீன்சில் ஒரு மாதத்திற்கு முன்பு கடத்தப்பட்ட மூவர் தப்பிச் சென்றனர்

பிலிப்பீன்சில் ஒரு மாதத்திற்கு முன்பு கடத்தப்பட்ட மூவர் தப்பிச் சென்றனர்

1 mins read

மணிலா: தெற்கு பிலிப்பீன்சில் நான்கு வாரங்களுக்கு முன்பு கடத்தப்பட்ட கட்டுமான ஊழியர்கள் மூவர் அபு சாயஃப் போராளிகளிடமிருந்து தப்பிச் சென்றுள்ளனர். அந்த மூன்று ஊழியர்களும் தற்போது ஜோலோ தீவில் உள்ள போலிசாரிடம் ஒப் படைக்கப்பட்டுள்ளதாக தகவல் கள் கூறுகின்றன. அந்த மூவருடன் தப்பிச் சென்ற நான்காவது நபர் வேறு திசையில் சென்றுவிட்டதால் அவர் என்ன ஆனார் என்பது தெரியவில்லை என்று போலிசார் கூறினர். அந்த நால் வரையும் விடுவிக்க கொடுக்கப் பட்ட பிணைப் பணம் செல்லாது என்பது தெரிந்ததும் அவர்களை விடுவிக்க கடத்தல்காரர்கள் மறுத்து வந்தனர்.

இந்நிலையில் வெள்ளிக் கிழமை கடத்தல்காரர்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்த போது அந்த நால்வரும் அங் கிருந்து சாதுரியமாக தப்பிச் சென்றதாகக் கூறப்பட்டது. பிலிப்பீன்சின் புறநகர் காட்டுப் பகுதியில் அபு சாயஃப் போராளிகள் வெளிநாட்டினர் உள்பட பலரைக் கடத்திச் சென்று பிணைப்பிடித்து வைத் துள்ளனர். அவர்களை விடுவிக்க பிணைப்பணம் கேட்டு மிரட்டுவது, கேட்ட தொகை கைக்கு வரவில்லை என்றால் பிணையாளிகளின் தலைகளைத் துண்டித்து படுகொலை செய்வது உள்ளிட்ட பல்வேறு அட்டூழியச் செயல்களில் அபு சாயஃப் குழுவினர் ஈடுபட்டு வரு கின்றனர். கடந்த மாதம் மட்டும் 7 பேரை போராளிகள் படுகொலை செய்ததாக போலிசார் கூறியுள்ளனர்.