கோலாலம்பூர்: மலேசியாவின் முன்னாள் பிரதமர் மகாதீர் முகமது கலந்துகொண்ட 'நத்திங் டு ஹைட் 2.0' கலந்துரையாடலின்போது ஏற்பட்ட அமளியால் அந்நிகழ்வு நிறுத்திவைக்கப்பட்டது. நேற்று நடந்த அந்த கலந்துரையாடலில் திரு மகாதீர் மேடையில் பேசிக்கொண்டிருந்தபோது பங்கேற்பாளர்களில் ஒருவர், போத்தல் ஒன்றை மேடையை நோக்கி வீசினார். டாக்டர் மகாதீர் 1985 'மெமாலி' சம்பவத்தைப் பற்றிய கேள்விக்கு பதிலளித்துக் கொண்டிருந்தபோது அது நடந்தது. அதைத் தொடர்ந்து அங்கு கூடியிருந்தவர்களில் சிலர் நாற்காலிகளையும் பொருட்களையும் தூக்கி வீசினர். உடனடியாக கலந்துரையாடல் நிறுத்தி வைக்கப்பட்டு மகாதீரும் மற்ற எதிர்கட்சியினரும் அரங்கிலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
மகாதீர் கூட்டத்தில் மூண்ட அமளி. படம்: ஸ்டார் தொலைக்காட்சி காணொளி

