மலேசியா: கலவரத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்

மலேசியா: கலவரத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்

1 mins read

கோலாலம்பூர்: மலேசியாவில் எதிர்க்கட்சி சென்ற ஞாயிற்றுக் கிழமை ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கின்போது நடந்த வன்செயல்கள் தமக்கு வருத்தம் அளிப்பதாகக் கூறிய மலேசிய துணைப் பிரதமர் அகமட் ஸாஹிட் ஹமிடி, அதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார். போலிசார் அது தொடர்பில் விசாரணை செய்து தக்க நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் அதற்குக் காரண மானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் சொன்னார். "நாட்டில் ஜனநாயகம் முறையாக நிலை நிறுத்தப்பட வேண்டும். நமக்கிடையே கருத்து வேறு பாடுகள் இருக்கலாம்.

ஆனால் தனிப்பட்டவர்களுக்கு எதிராக வன்செயல்கள் கூடாது", என திரு ஸாஹிட் புத்ரா உலக வாணிக மையத்தில் செய்தி யாளர் கூட்டத்தில் பேசியபோது கூறினார். 'மறைப்பதற்கு எதுவும் இல்லை 2.0 ' என்ற கருத்தரங்கிற்கு எதிர்க்கட்சி ஏற்பாடு செய்திருந்தது. அந்த கருத் தரங்கில் மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீர் முகம்மதுவும் கலந்துகொண்டார். கருத்தரங்கில் கலந்து கொண்ட பார்வையாளர்களில் சிலர் திரு மகாதீரிடம் கேள்விகள் கேட் டு க்கொண்டி ரு ந் தபோது அங்கு வன்செயல் மூண்டது. அங்கிருந்த சிலர், கூட்டத் தினர் மீது காலணிகளையும் நாற்காலிகளையும் வீசியதைத் தொடர்ந்து அங்கு கலவரம் மூண்டது.

2017-08-15 06:00:00 +0800