ஜகார்த்தா: போதைப்பொருள் கடத்தலை ஒழிக்க இந்தோனீசிய அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. போதைப்பொருள் சந்தேக நபர்களுக்கு எதிராக பிலிப்பீன்ஸ் அதிபர் டுட்டர்டே எடுத்து வரும் கடும் நடவடிக்கை போல் இந்தோனீசியாவிலும் எடுக்கப்படும் என்று இந்தோனீசிய அதிபர் ஜோக்கோவி விடோடோவும் தேசிய போலிஸ் படைத் தலைவரும் முன்னதாகக் கூறி வந்தனர். இந்நிலையில் போதைப்பொருள் விற்பனையாளர்களைக் கண்டதும் சுடுவதற்கு சட்ட அமலாக்க அதிகாரிகளுக்கு இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோ கடந்த ஜூலை 21ஆம் தேதி உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து இதுவரை போதைப்பொருள் குற்றவாளிகள் என சந்தேகிக்கப்பட்ட 55 பேர் அதிகாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டதாக அம்னாஸ்டி அனைத்துலக அமைப்பு தெரிவித்துள்ளது.
போதைப்பொருள் கடத்தலை ஒழிக்க இந்தோனீசியா கடும் நடவடிக்கை
1 mins read

