வாஷிங்டன்: அமெரிக்காவின் அறிவுசார்ந்த சொத்துரிமை சட்டத்தை மீறிய வகையில் சீனா நடத்திவரும் வர்த்தக நடைமுறை கள் தொடர்பாக விசாரணை நடத்துமாறு அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் உத்தர விட்டுள்ளார். அனைத்துலக வர்த்தக சட்டங்களை மீறிய வகையில் சீனா நடத்தி வரும் வர்த்தக முறைகேடுகளைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்குமாறு அமெரிக்க வர்த்தகப் பிரதி நிதிக்கு திரு டிரம்ப் உத்தர விட்டுள்ளார். அணுவாயுதங்கள் மற்றும் ஏவுகணை ஆற்றலைப் பயன்படுத்தி அமெரிக்காவை மிரட்டிவரும் வடகொரியாவை கண்டிக்கத் தவறிய சீனா, வட கொரியாவின் செயலுக்கு ஆதரவு தெரிவித்து வருவது அமெரிக்காவுக்கு அதிருப்தி யையும் சினத்தையும் ஏற்படுத்தி யுள்ளது.
இதுதொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள திரு டிரம்ப், அமெரிக்காவின் அறிவுசார்ந்த சொத்துரிமைகளை பிறநாடுகள் திருடிப் பயன்படுத்துவதால் நமது நாட்டில் ஆண்டுதோறும் பல மில்லியன் பேர் வேலை இழக்கும் அபாயமும் பல பில்லியன் டாலர் அளவுக்கு பொருளியல் இழப்பும் ஏற்படுகிறது என்று கூறினார். அமெரிக்க அதிபராக நமது நாட்டின் தொழிலாளர்கள், மற்றும் தொழில் நுட்பத்தைப் பாதுகாக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் தமக்கு இருப்பதாகவும் திரு டிரம்ப் கூறினார். டிரம்ப்பின் இந்த உத்தரவு தொடர்பான செய்திகள் வெளியானதும் சீனாவின் வர்த்தக அமைச்சு கண்டன அறிக்கை வெளியிட்டது.

