அமெரிக்காவின் குவாம் தீவு அருகே ஏவுகணை பாய்ச்சும் தனது திட்டத்தை வடகொரியா வரைந்துள்ளது. வடகொரிய அர சாங்க ஊடகங்களுக்கு வெளி யிடப்பட்ட புகைப்படங்கள் அதனை உணர்த்தின. ராணுவ அதிகாரிகள் வரைந்த அந்தத் தாக்குதல் திட்டத்தை வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன் பார்வையிடுவதையும் திட்டம் பற்றி அவரிடம் அதிகாரிகள் தெளிவாக விளக்குவதையும் ஊட கங்களுக்குக் கிடைத்த படங்கள் மூலம் அறிந்துகொள்ள முடிந்தது. 'உத்திபூர்வ படையின் தாக்கு தல் திட்டம்' என்ற பெயரிலான அத்திட்டம் வடகொரியாவின் கிழக்குக் கடற்கரைப் பகுதியிலி ருந்து பாய்ச்சப்படும் ஏவுகணை கடந்து செல்லும் பாதையை விவரிக்கிறது.
ஜப்பானுக்கு மேலே பறந்து சென்று குவாம் அருகே கடலில் நிலைகொள்ளும் வரை அந்தப் பாதை தெளிவாக வகுக் கப்பட்டுள்ளது. வடகொரியாவின் நீர்மூழ்கித் தளமான சின்போ நகரிலிருந்து ஏவுகணை கிளம்பும் என்று வரைபடத்தில் குறிக்கப்பட்டுள்ள தாக கிம் டோங் யுப் என்னும் ராணுவ நிபுணர் தெரிவித்துள்ளார். தென்கொரியாவின் சோல் நகரில் உள்ள குயுங்நாம் பல்கலைக் கழகத்தின் தூரகிழக்கு ஆய்வு களுக்கான கல்விக் கழகத்தைச் சேர்ந்தவர் அவர். கடந்த வாரம் வடகொரியா மேற்கோள் காட்டியிருந்த இடம் சின்போ நகரத்தோடு பொருந்து வதாக திரு கிம் டோங் தெரி வித்துள்ளார்.

