முழு மது விலக்குக்கு இந்தோனீசியாவின் முக்கிய முஸ்லிம் அமைப்பு எதிர்ப்பு

முழு மது விலக்குக்கு இந்தோனீசியாவின் முக்கிய முஸ்லிம் அமைப்பு எதிர்ப்பு

2 mins read

ஜகார்த்தா: இந்தோனீசியாவில் முழுமையான மது விலக்குக்கு அந்நாட்டின் மிகப்பெரிய முஸ்லிம் அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள் ளது. நாட்டில் கள்ளச்சாராய அபாயம் அதிகரித்துள்ளதால் கவலை அடைந்துள்ள நாஹ்ட்லாடுல் உலாமா(என்யூ) என்ற அமைப்பின் ஜகார்த்தா கிளை முழு மது விலக்குக்கு கடும் எதிர்ப்பு தெரி வித்தது. என்யூவின் ஜகார்த்தா ஆய்வு, மேம்பாட்டுக் கழகத்தின் தலை வரான அப்துல் வாஹித் ஹாஸிம், "மது விற்பனைக்குத் தடை விதிக் கப்பட்டால் கள்ளச் சாராயம் அதி கரிக்கும். இது, மோசமான காயங் களுக்கும் மரணங்களுக்கும் வழி வகுக்கும்," என்றார். கடந்த பிப்ரவரி மாதத்தில் ஜகார்த்தா நகரம் முழுவதும் 327 பதின்ம வயதினர்களிடம் நடத்தப் பட்ட ஆய்வில் சாதாரண மூலிகை கடைகளில் உள்ளூரின் மலிவான சாராயம் எளிதில் கிடைப்பதாக 71.5 விழுக்காட்டினர் தெரிவித்த னர்.

இந்தோனீசியாவில் வழக்க மாக வீட்டில் தயாரிக்கப்படும் இந்த வகை சாராயத்தில் சில சமயங்களில் கொசு மருந்து, தின்னர் போன்ற அபாயகரமான பொருட்களும் சேர்க்கப்படுவதால் உயிருக்கு ஆபத்தாக அமைந்து விடுகிறது. "பீர் குடித்து ஒருவரும் இறந்தது கிடையாது. ஆனால் கள்ளச்சாராயத்தைக் குடித்து இளையர்கள் இறக்கக் கூடும்," என்று திரு அப்துல் எச்சரித்தார். கடந்த 2016 செப்டம்பரில் மதுவும் புத்துணர்ச்சி பானமும் கலந்த ஒரு வகை கள்ளச்சாரா யத்தைக் குடித்த 'நார்த்குரோ கோல்' வட்டாரத்தைச் சேர்ந்த இரு இளையர்கள் மாண்டனர். இந்தச் சம்பவத்துக்கு ஒரு மாதத்துக்குப் பிறகு கிழக்கு ஜகார்த்தாவில் ஜாட்டிநெகாரா வைச் சேர்ந்த பத்து பேர் கள்ளச் சாராயத்துக்கு பலியாகினர்.