பேங்காக்: தெற்கு தாய்லாந்தில் உள்ள கார் விற்பனைக் கூடத்தினுள் புகுந்து இரண்டு கார்களைத் திருடிச் சென்றவர் கள் அந்தக் கார்களை வெடி குண்டுகளாக மாற்றியதாக போலிசார் கூறினர். அவ்விரு கார்களையும் திருடிச் சென்றவர்கள் போராளி களாக இருக்கக்கூடும் என்று போலிசார் சந்தேகிக்கின்றனர். மலேசியாவின் எல்லையை ஒட்டிய சோங்லா மாநிலத்தில் உள்ள கார் விற்பனைக் கூடத் தினுள் புதன்கிழமை நுழைந்த ஒரு கும்பல், ஒரு காரை திருடிச் சென்று பட்டானி மாநிலத்திற்கு அருகில் உள்ள கிராமப்புற சாலையில் வெடிக்கச் செய்த தாகவும் அதனைத் தொடர்ந்து அக்கும்பல் உறுப்பினருக்கும் போலிசாருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நீடித்த தாகவும் போலிஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறினார். நேற்று அதே பகுதியில் மற்றொரு கார் குண்டு வெடித்த தில் சொத்து சேதம் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. கார்களைத் திருடிச் சென்ற சந்தேக நபர்கள் பிணைப்பிடித்து வைத்திருந்த கார் விற்பனையாளர் ஒருவர் அந்த சந்தேகப் பேர்வழிகளால் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலிசார் கூறினர். தெற்கு தாய்லாந்தில் 2004ஆம் ஆண்டு முதல் நடந்து வரும் வன்முறைச் சம்பவங்களில் சுமார் 6,600 பேர் உயிரிழந்தனர்.
திருடிய கார்களை வெடிகுண்டுகளாக மாற்றிய தாய்லாந்து போராளிகள்
1 mins read

