கம்போடியா தொலைத்தொடர்பு வழி மோசடி: 400 வெளிநாட்டினர் சிக்கினர்

கம்போடியா தொலைத்தொடர்பு வழி மோசடி: 400 வெளிநாட்டினர் சிக்கினர்

1 mins read

நோம்பென்: கம்போடியாவில் இருந்- தவாறு சீனாவில் உள்ளவர்களிடம் தொலைபேசி, இணையம் வழி மோசடி வேலைகளில் ஈடுபட்ட 400 வெளிநாட்டவர்களை அந்- நாட்டின் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் தைவான், சீனா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள். இணையம், தொலைத்தொடர்பு வழி நடந்து வரும் மோசடி செயல்களில் சீனா பில்லியன் கணக்கான டாலர்களை இழந்து வருவதாக பெய்ஜிங் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சீனாவில் மோசடி வேலை களைக் கட்டவிழ்த்து விடுவதற் காக குண்டர் கும்பலுக்கு தைவான் புகலிடம் கொடுத்து வருவதாக சீனா குற்றம் சாட்டி வருகிறது. தென்கிழக்காசிய நாடுகளில் கம்போடியா சீனாவின் நெருங்கிய நட்பு நாடாகக் கருதப்படுகிறது.

கம்போடியாவும் சீனாவைப் போல தைவானை ஒரு தனி நாடாக அங்கீகரிக்கவில்லை. கம்போடியா அண்மைய ஆண் டுகளில் இணைய, தொலைத் தொடர்பு மோசடிகளில் ஈடுபட்ட 600க்கு மேற்பட்ட சீன, தைவான் நாடுகளைச் சேர்ந்தவர்களை நாடு கடத்தியுள்ளது. கம்போடியாவின் தலைநகர் நோம்பென்னில் கடந்த புதன் கிழமை சீன நாட்டைச் சேர்ந்த 225 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 25 பேர் பெண்கள். அவர்கள் 'வாய்ஸ் கால்' என்னும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அச்சுறுத்தி பணம் பறிக்கும் மோசடி வேலைகளில் ஈடுபட்டதாக கம்போடியாவின் பயங்கரவாதத் தடுப்புக் காவல்துறை பிரிவின் துணை இயக்குநர் தோ சாரோன் தெரிவித்தார். கைது செய்யப்பட்ட அனைவரி டமும் விசாரணை மேற்கொள்ளப் பட்டு வருவதாகவும் அவர்கள் விரைவில் நாடு கடத்தப்படுவர் எனவும் அவர் தெரிவித்தார்.