தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஹாங்காங்கில் மூவரை விடுவிக்க வெளிநாட்டு அரசியல்வாதிகள் கோரிக்கை

1 mins read

ஹாங்காங்: ஹாங்காங்கில் 2014ஆம் ஆண்டு நடந்த ஆர்ப் பாட்டம் தொடர்பில் கைது செய்யப் பட்ட ஜனநாயக ஆதரவாளர்கள் மூவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருப்பதற்கு வெளி நாட்டு அரசியல்வாதிகளும் வழக் கறிஞர்களும் மற்ற தொண்டர் களும் கண்டனம் தெரிவித்துள் ளனர். அந்த மூவரையும் விடுதலை செய்யக் கோரி அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். முன்னாள் பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் சர் மால்கம் ரிஃப்கிண்ட், அமெரிக்க நாடாளுமன்ற உறுப் பினர் கிறிஸ்டோபர் ஸ்மித், கனடா நாடாளுமன்ற உறுப்பினர் கார்னட் ஜினுஸ், மாலத் தீவுகளின் முன்னாள் அதிபர் முகம்மது ந‌ஷீத் உள்ளிட்ட அனைத்துலக முக்கிய பிரமுகர்கள் 25 பேர் அந்த மூன்று இளைஞர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர்.

ஹாங்காங்கில் சிறைத் தண் டனை விதிக்கப்பட்ட அந்த மூவரையும் விடுவிக்குமாறு ஹாங்காங் மற்றும் சீன அரசாங் கத்தை அனைத்துலக சமூகம் நெருக்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண் டுள்ளனர். ஹாங்காங்கில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஆர்ப்பாட்டம் தொடர்பில் மாணவர் தலைவர் ஜோ‌ஷுவா, அலெக்ஸ் சோவ், நாதன் லா ஆகிய மூவர் மீதும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.