ஹெல்சின்கி: ஃபின்லாந்து நாட்டின் தென்மேற்குப் பகுதியில் உள்ள டுர்கு என்ற நகரில் உள்ள மார்க்கெட் சதுக்கத்தில் மக்கள் அதிகமாக கூடியிருந்த நேரத்தில் அங்கு கையில் கத்தியுடன் வந்த ஒருவன் அங்கிருந்தவர் மீது சரமாரியாக கத்தியால் குத்தியதில் இருவர் உயிரிழந்ததாகவும் 6 பேர் காயம் அடைந்ததாகவும் போலிசார் கூறினர். கத்தியால் தாக்கிய அந்த ஆடவர் மீது போலிசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் அந்த நபர் காலில் காயமடைந்த நிலையில் அவரை போலிசார் கைது செய்துள்ளனர். அந்த நபர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்? அவர் அத்தகைய செயலில் ஈடுபட்டதற்கு என்ன காரணம்? என்பது இன்னும் கண்டறியப்படவில்லை என்று போலிஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறினார். அண்மைய காலமாக ஐரோப்பிய நாடுகளில் கத்திக்குத்து தாக்குதல், கூட்டத்தினர் மீது வாகனங்களை மோதுவது போன்ற தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.
ஃபின்லாந்தில் கத்திக்குத்து தாக்குதல்: இருவர் பலி, 6 பேர் காயம்
1 mins read

