பயங்கரவாத ஒழிப்பை ஆதரிக்காவிட்டால் பாகிஸ்தான் தண்டிக்கப்படும்: அமெரிக்கா

பயங்கரவாத ஒழிப்பை ஆதரிக்காவிட்டால் பாகிஸ்தான் தண்டிக்கப்படும்: அமெரிக்கா

1 mins read
0eb24ff0-cab5-492d-9bb4-db6332f4ca58
-

ஆப்கானிஸ்தான் போராளிக் குழுக்களின் சொர்க்க பூமி யாக பாகிஸ்தான் தொடர்ந்து விளங்கிவந்தால் தனது ராணுவத் தோழமை நாடு என்னும் தகுதியை பாகிஸ் தான் இழக்க நேரிடும் என்று அமெரிக்கா எச்சரித்து உள்ளது. மேலும் பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டும் முயற்சி களுக்கு பாகிஸ்தான் ஒத் துழைப்பு கொடுக்காவிட்டால் அந்நாடு தண்டிக்கப்படும் என்றும் அமெரிக்கா கூறியுள் ளது. இதர நாடுகளால் அணுக முடியாத அமெரிக்காவின் அதிநவீன ராணுவ தொழில் நுட்பத்தை நட்பு நாடு என் கிற அந்தஸ்துடன் பாகிஸ் தான் பெற்றுவருவதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன் தெரிவித்துள்ளார். எனினும், இந்தியாவுடன் பனிப்போரில் ஈடுபட்டு வரும் பாகிஸ்தான் தலிபான் போரா ளிகளுக்கு புகலிடம் அளிக் கிறதா? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். பயங்கரவாதிகள் எங்கி ருந்தாலும் அவர்களை தாக் கப்போவது நிச்சயம் என்பதே அதிபர் ட்ரம்ப்பின் நிலைப் பாடு என்றும் பாகிஸ்தான் தலிபான் போராளிகளுக்கு தொடர்ந்து புகலிடம் அளித் துவந்தால் அதனை உடனடி யாக நிறுத்த வேண்டும் என் றும் டில்லர்சன் தெரிவித்தார்.