மராவி நகரின் முக்கிய பள்ளிவாசலை பிலிப்பீன்ஸ் ராணுவம் திரும்பக் கைப்பற்றியது

மராவி நகரின் முக்கிய பள்ளிவாசலை பிலிப்பீன்ஸ் ராணுவம் திரும்பக் கைப்பற்றியது

1 mins read

மணிலா: பிலிப்பீன்சின் மராவி நகரில் உள்ள முக்கிய பள்ளிவாசலை அந்நாட்டு ராணுவம் போராளிகளிடமிருந்து திரும்பக் கைப்பற்றியுள்ளது. இதன் மூலம் அந்நகரின் மத்தியப் பகுதியை கைப்பற்றி யிருப்பதாக அரசாங்கம் அறிவித் துள்ளது. மராவி நகருக்குள் கடந்த மே 23ஆம் தேதி ஊடுருவிய மாவுட் பயங்கரவாதக் குழுவைச் சேர்ந்த துப்பாக்கிக் காரர்கள் இதுவரை அந்த பள்ளிவாசலை தங்கும் இடமாக வும் பிணையாளிகளைப் பிடித்து வைக்கும் இடமாகவும் பயன் படுத்தி வந்தனர். அந்நகரின் மத்தியப் பகுதியில் முன்னேறிச் செல்லும் ராணுவத்தினர், அங்கு பயங்கரவாதிகளோ அல்லது பிணையாளிகளோ காணப்பட வில்லை என்று கூறியுள்ளனர். மராவி நகரில் போராளி களுக்கும் ராணுவத்தினருக்கும் இடையே மூன்று மாதங்களுக்கும் மேலாக சண்டை நீடிக்கிறது. விரைவில் அந்நகரம் முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டில் வந்து விடும் என்று ராணுவம் கூறுகிறது.