பலத்த புயல் காற்றுத் தாக்கி யதைத் தொடர்ந்து ஹாங்காங், மக்காவ் நகரங்களில் 8ஆம் எண் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட் டது. தென்சீனா வழியாக 'ஹாட்டோ' சூறாவளி நாசப்படுத் திய நான்கு நாட்களுக்குள் 'பாக் கார்' புயல் காற்று நேற்றுக் காலை கடும் சீற்றத்துடன் கிளம்பியது. மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியது. அதனைத் தொடர்ந்து கடும் மழை பெய்தது. அதனால், கடந்த புதன்கிழமை ஹாட்டோ சூறாவளி ஏற்படுத்திச் சென்ற பாதிப்புகளைச் சரிசெய்து கொண்டிருந்த அவசரகாலப் பணியாளர்கள் கடும் சிரமங்களை நேற்று எதிர்நோக்கினர். நூற்றுக்கணக்கான விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. 8ஆம் எண் புயல் எச்சரிக்கை என்பது மூன்றாவது ஆகப்பெரிய எச்சரிக்கை. பள்ளிக்கூடங்களை யும் வர்த்தக நிலையங்களையும் இயக்க அந்த எச்சரிக்கை தடை செய்யும். ஆனால் நேற்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் கடுமையான பாதிப்பு எதுவும் ஹாங்காங்கில் உணரப்படவில்லை என்று அதி காரிகள் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து எச் சரிக்கை நிலை 3ஆம் எண் ணாகக் குறைக்கப்பட்டது.
சீனாவின் மக்காவ் நகரில் வீசிய பலத்த புயல் காற்று வாகனங்களைப் பந்தாடியது. படம்: ராய்ட்டர்ஸ்

