ஹார்வி புயல்: இருவர் பலி

ஹார்வி புயல்: இருவர் பலி

1 mins read

ராக்போர்ட்: அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலத்தை ஹார்வி புயல் உலுக்கியுள்ளது. இந்தப் புயல் காரணமாக ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை இரவு மரணம் அடைந்ததாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், மேலும் ஒருவர் நேற்று முன்தினம் உயிரிழந்ததாக டெக்சஸ் மாநிலப் போலிசார் உறுதி செய்துள்ளனர். வெள்ளப் பெருக்கு ஏற் பட்டுள்ள சாலையில் வாகனம் ஓட்டிச் செல்ல முயன்ற பெண் ஒருவர் வெள்ளத்தில் மூழ்கி மரணமடைந்ததாகத் தெரி விக்கப்பட்டது. மரணம் அடைந்த பெண்ணை அதிகாரிகளால் உடனடியாக அடையாளம் காண முடியவில்லை. மரணம் அடைந்தோர் எண் ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. அதுமட்டுமல்லாது, புயல் காரணமாகப் பலர் காயம் அடைந்திருப்பதாக அதிகாரிகள் கூறினர்.

இதற்கிடையே, டெக்சஸ் மாநிலத்தின் தென்கிழக்குப் பகுதியில் வசித்து வருபவர்களை அவர்களது வீடுகளிலிருந்து மீட்புப் பணியாளர்கள் பத்திரமாக வெளியேற்றி வருகின்றனர். மீட்புப் பணி நேற்று காலை தீவிரப்படுத்தப்பட்டது. இதில் நூற்றுக்கணக்கானோர் காப்பாற் றப்பட்டதாக அதிகாரிகள் தெரி வித்தனர். இன்னும் பலர் தங்கள் இருப்பிடங்களிலிருந்து வெளி யேற முடியாமல் உதவிக்காகக் காத்துக்கொண்டிருக்கின்றனர். ஹார்வி புயல் 1961ஆம் ஆண்டுக்குப் பிறகு டெக்சஸ் மாநிலத்தைப் பாதித்திருக்கும் ஆக மோசமான புயல். மணிக்கு 209 கிலோ மீட்டர் வேகத்தில் சீறி வரும் புயல் காற்றினால் அதிகச் சேதம் ஏற்பட்டுள்ளது. புயலின் காரணமாகச் சில பகுதிகளில் மின் தடை ஏற்பட்டுள்ளது.