யங்கூன்: மியன்மாரின் வடமேற்குப் பகுதியில் வன்முறை மோசமடைந் துள்ள நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த குறைந்தது 4,000 முஸ்லிம் அல்லாதோரை அந்நாட்டு அரசாங் கம் அங்கிருந்து பத்திரமாக வெளியேற்றி உள்ளது. அப்பகுதியில் வாழும் ஆயிரக் கணக்கான ரொஹின்ஜியா முஸ்லிம்கள் உயிர் தப்பும் நோக் குடன் பங்ளாதேஷுக்குள் நுழைந் துள்ளனர். ரொஹின்ஜியா போராளிகள் திட்டமிட்டு தாக்குதல்களை நடத்தியதில் மரணமடைந்தோர் எண்ணிக்கை 98ஆக உயர்ந் துள்ளது.
இந்த வன்முறை கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. மாண்டவர்களில் 80 போராளி களும் 12 பாதுகாப்புப் படையினரும் அடங்குவர் என்று மியன்மார் அரசாங்கம் அறிவித்தது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்துக்குப் பிறகு இதுவே அப்பகுதியில் நிகழ்ந்துள்ள ஆக மோசமான வன்முறைச் சம்பவம். இதனால் முஸ்லிம் அல்லாத கிராமவாசிகளையும் அரசாங்க ஊழியர்களையும் மியன்மார் அரசாங்கம் அங்கிருந்து வெளி யேற்றி உள்ளது. போராளிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையிலான சண்டை நேற்று முன்தினம் மோசமடைந்ததாக அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர். பௌத்த சமயத்தினரைப் பெரும்பான்மையாகக் கொண் டிருக்கும் மியன்மாரில் அங்கு வாழும் ஏறத்தாழ 1.1 மில்லியன் முஸ்லிம் ரொஹின்ஜியா மக்கள் நடத்தப்படும் விதம் குறித்து அதிருப்திக் குரல்கள் எழுந் துள்ளன. இந்தப் பிரச்சினை மியன்மாரின் தேசியத் தலைவரான ஆங் சான் சூச்சிக்குப் பெரும் சவாலாக இருந்து வருகிறது.

