கோலா குபு பாரு: மலேசியாவில் உள்ள ஜெண்டிங் ஹைலண்ட்ஸ் அருகில் நேற்று அதிகாலை நிகழ்ந்த சாலை விபத்தில் ஒருவர் மரணம் அடைந்தார். நால்வர் காயமடைந்தனர். ஜெண்டிங் ஹைலண்ட்ஸை நோக்கிச் சென்றுகொண்டிருந்த கார் கட்டுப்பாடு இழந்து எதிர்புறத்தில் வந்துகொண்டிருந்த கார் மீது மோதியது. காரை ஓட்டிக்கொண்டிருந்த 32 வயது முகம்மது சைஃபுல் முகம்மது ஹஷிம் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தார். அவருடன் பயணம் செய்துகொண்டிருந்தவருக்குக் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. விபத்தில் சிக்கிய இன்னொரு காரில் பயணம் செய்துகொண்டிருந்தவர்களும் படுகாயம் அடைந்தனர். காயமுற்றோர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
ஜெண்டிங் ஹைலண்ட்ஸ் அருகில் விபத்து: ஒருவர் மரணம்
1 mins read

