பெய்ரூட்: சிரியா எல்லையில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு எதிரான தாக்குதலை லெபனான் ராணுவம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. 2014ஆம் ஆண்டிலிருந்து சிரியா எல்லையில் ஐஎஸ் பயங்கரவாதிகளால் பிணைக்கைதிகளாகச் சிறைபிடிக்கப்பட்டுள்ள லெபனான் ராணுவ வீரர்களை விடுவிப்பதற்கான பேச்சுவார்த்தை தற்பொழுது நடைபெற்றுவருகிறது. இந்தத் தற்காலிகப் போர் நிறுத்தம், கடத்தப்பட்டுள்ள ராணுவ வீரர்களை மீட்க வழிவகுக்கும் என்று லெபனான் ராணுவம் அறிக்கை வெளியிட்டுள்ளது. ஐஎஸ் பயங்கரவாதிகள் லெபனானின் ஆர்சல் நகரத்தை தாக்கியபோது 30 ராணுவ வீரர்கள், போலிஸ் அதிகாரிகள் ஆகியோரைக் கடத்திச் சென்றனர். இதில் நான்கு பேரைப் பயங்கரவாதிகள் கொன்றுள்ளார்கள். ஒருவர் காயம் காரணமாக உயிர் இழந்தார். மேலும் 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் 16 பேர் விடுவிக்கப்பட்டனர் என்று அறியப்படுகிறது.
ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக லெபனான் தற்காலிகப் போர் நிறுத்தம்
1 mins read

