சதித் திட்டம்: இந்தோனீசிய மாதுக்கு சிறை

சதித் திட்டம்: இந்தோனீசிய மாதுக்கு சிறை

1 mins read
2f4831d1-1b2a-498f-a05a-3e0da5e095b8
-

ஜகார்த்தா: இந்தோனீசியாவில் ஜகார்த்தா அதிபர் மாளிகையை தற்கொலைத் தாக்குதல் மூலம் தகர்க்க சதித் திட்டம் தீட்டியதற்காக இந்தோனீசிய மாது ஒருவருக்கு ஜகார்த்தா நீதிமன்றம் ஏழரை ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள் ளது. அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர் களும் அந்தப் பெண்ணின் வழக் கறிஞரும் இத்தகவலைத் தெரி வித்தனர். டியன் யுலியா நோவி என்ற 28 வயது பெண், ஜகார்த்தா அதிபர் மாளிகையைத் தகர்க்க சதித்திட்டம் தீட்டியவர் என்ற சந்தேகத்தின் பேரில் சென்ற ஆண்டு கைது செய்யப்பட்டார். அவருடன் சேர்ந்து அவரது கணவர் முகமட் நூர் சோலிகின் என்பவரும் அந்த சதித் திட்டம் தொடர்பில் கைது செய்யப்பட்டார். டியன் யுலியா நோவி சிங்கப்பூரிலும் தைவானிலும் பணிப்பெண்ணாக வேலை செய் திருக்கிறார். 2008ஆம் ஆண் டுக்கும் 2009ஆம் ஆண்டுக் கும் இடைப்பட்ட காலத்தில் நோவி சிங்கப்பூரில் இருந் திருக்கிறார். நோவிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்க வேண்டும் என்று அரசுதரப்பு வழக்கறிஞர்கள் கேட்டுக் கொண் டிருந்தனர். நோவி அவரது குற்றத்தை ஒப்புக்கொண்டதால் அவருக்கான தண்டனை குறைக் கப்பட்டுள்ளது என்று அவரது வழக்கறிஞர் கூறினார்.

டியன் யுலியா நோவி. படம்: ஏஎஃப்பி