ஹியூஸ்டனில் வெள்ளம்; மீட்புப் பணிகள் தீவிரம்

ஹியூஸ்டனில் வெள்ளம்; மீட்புப் பணிகள் தீவிரம்

1 mins read

வா‌ஷிங்டன்: அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலத்தில் கன மழையுடன் கூடிய பலத்த புயல் காற்று தாக்கி வரும் நிலையில், ஹியூஸ்டன் நகரிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் ஏற் பட்டுள்ள வெள்ளத்தில் சிக்கித் தவித்த சுமார் 2000 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். சென்ற வார இறுதியில் ஹியூஸ்டன் நகரில் பல இடங்களில் பெய்த கனமழை காரணமாக முக்கிய சாலைகள் அனைத்தும் ஆறுகளாக மாறின. அந்நகரில் ஓராண்டு முழுவதும் பெய்யவேண்டிய மழை ஒரே வாரத்தில் கொட்டித்தீர்த்ததாகக் கூறப்படுகிறது. கனமழை தொடர்ந்து பெய்வதால் மீட்புப் பணிகளுக்கு இடையூறு ஏற்பட்டிருப்பதாக மீட்புக் குழுவினர் தெரிவித்துள் ளனர். அங்குள்ள சாலைகள் மற்றும் தண்டவாளங்கள் வெள்ளத் தில் மூழ்கிக் கிடப்பதால் ஹியூஸ் டன் நகரில் நூற்றுக்கணக்கான சாலைகள் மூடப்பட்டுள்ளன. மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளும் மற்றவர்களும் பாதுகாப்பு கருதி வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். பல பள்ளிக் கூடங்கள் மூடப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான மக்கள் மின்சாரம் இன்றி தவிக்க நேர்ந்ததாகவும் கூறப்படுகிறது.

புயல் மற்றும் கனமழையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள ஹியூஸ்டன் நகர சுற்று வட்டாரப் பகுதியில் வெள்ளநீரில் சிக்கித் தவித்த குளோரியா கார்சியா என்பவரை மீட்புக் குழுவைச் சேர்ந்த ஒருவர் காப்பாற்றுகிறார். படம்: ராய்ட்டர்ஸ்