'யிங்லக் இருக்கும் இடம் தெரியவில்லை'

'யிங்லக் இருக்கும் இடம் தெரியவில்லை'

1 mins read
a0bee5e5-def4-4106-b76a-49c962867eaf
-

பேங்காக்: தாய்லாந்து முன்னாள் பிரதமர் யிங்லக் ‌ஷினவத்ரா துபாய்க்கு தப்பிச் சென்றிருப் பதாக அவரது கட்சி தெரிவித் துள்ள போதிலும் அவர் இருக்கும் இடம் உறுதியாகத் தெரியவில்லை என்று அந்நாட்டு தற்காப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார். "யிங்லக் எந்த நாட்டிற்கு தப்பிச் சென்றார்? எந்த நாட்டில் அடைக் கலம் கேட்டிருக்கிறார்?," என்ற விவரம் தெரியவில்லை என்று தற்காப்பு அமைச்சர் பிரவிட் வோங் சுவான் கூறினார். அரிசி மானியத் திட்டம் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டிருந்த யிங்லக், தீர்ப்பு அறிவிக்கப்படவிருந்த நாளன்று நீதிமன்றத்திற்கு வரத் தவறியதை அடுத்து அவரைக் கைது செய்ய ஆணை பிறப்பிக்கப் பட்டது. யிங்லக் கம்போடியா, சிங்கப்பூர் வழியாக துபாய் சென்றுவிட்டதாக தகவல் வெளி யான நிலையில் அவர் தப்பிச் செல்ல கம்போடிய பிரதமர் உதவியதாகக் கூறப்படுவதை கம்போடியா மறுத்துள்ளது.